தந்தி மாரியம்மன் கோவிலில் 36 நாட்கள் நடந்த திருவிழா நிறைவு
குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், 36 நாட்கள் நடந்த திருத்தேர் திருவிழா நேற்று மறுபூஜையுடன் நிறைவு பெற்றது.குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம், 4ம் தேதி துவங்கி, தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அபிஷேக, ஆராதனை, அம்மன் திருவீதி உலா ஆகியவை நடந்தன.அதில், முக்கிய நிகழ்ச்சி யாக, சித்திரை தேரோட்டம், பூகுண்டம், முத்து பல்லக்கு, புஷ்ப பல்லக்கு, முளைப் பாரி ஊர்வலம் உள்ளிட்டவை நடந்தன.தேர் ஊர்வலத்தின் நிறைவாக, குன்னுார் பிராமணர் சங்கத்தினர் சார்பில் நடந்த விடையாற்றி உற்சவத்தில் அம்மனை குழந்தையாக பாவித்து, புஷ்ப ஊஞ்சல் உற்சவத்தில் சயன கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 36 நாட்கள் திருவிழா நேற்று மறுபூஜையுடன் நிறைவு பெற்றது.