உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கனவு இல்லம் கட்டுவதற்கு முதல்கட்ட பணம் வரவில்லை; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கனவு இல்லம் கட்டுவதற்கு முதல்கட்ட பணம் வரவில்லை; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கோத்தகிரி ; கோத்தகிரியில், கனவு இல்லம் பணிகள் தொடங்கி மூன்று மாதம் கடந்தும், முதல் கட்ட பணம் வராததால், பயனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 11 கிராம ஊராட்சிகளில், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 350 சதுர அடியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் மொத்தம், 278 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.வீடு கட்டுவதற்கு தேவையான ஆவணங்களும் பயனாளிகளிடம்இருந்து பெறப்பட்டுள்ளது. திட்டத்தில், அடித்தளம் அமைக்கும் பணி முடிந்தவுடன், முதல் கட்ட தொகை, பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், பயனாளிகள் அனைவருக்கும் இதுவரை முதல் கட்ட தொகை வழங்கப்படவில்லை. பயனாளிகளால் வீடுகளை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அதிருப்தி அடைந்த பயனாளிகள், 'தங்களுக்கு முதல் கட்ட தொகை வழங்க வேண்டும்,' என, நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர், பயனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, 'ஒரு வாரத்தில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை