உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பணி முடிவதற்குள் சாலை பெயர்ந்த அவலம்: அலட்சியத்தால் நிதி விரயம்

பணி முடிவதற்குள் சாலை பெயர்ந்த அவலம்: அலட்சியத்தால் நிதி விரயம்

பந்தலூர்; பந்தலுாரில் சாலை பணி முடிவதற்குள் பெயர்ந்து, விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பந்தலூர் அருகே பந்தபிலாவிலிருந்து மாங்கம் வயல் செல்லும் சாலை சேதமானதை அடுத்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.மக்கள் கோரிக்கையை அடுத்து, கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில் , பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2.4 கி.மீ., தார் சாலை, 300 மீ., சிமென்ட் சாலைக்கான பணிகள் நடந்து வருகிறது. தரமற்ற முறையில் பணிகள் நடந்து வருவதால் சில இடங்களில் பெயர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அரசு நிதி விரயமாவதை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரிகள் விரைவில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை