ஊட்டியில் புட்கார்னிவெல் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஊட்டி: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தாவரவியல் பூங்கா சாலையில் 'புட்கார்னிவெல்' நிகழ்ச்சி நடந்தது. ஊட்டியில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மாலை, 3:30 மணிமுதல் இரவு, 7:00 மணிவரை தனியார் ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் சங்கத்தினர் நடத்திய, 'புட் கார்னிவெல்' நிகழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்றனர். மேலும், படகு இல்லத்தில், புதிய படகுகள் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள்; இசை நிகழ்ச்சி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் திரளாக பங்கேற்று, நடனமாடி மகிழ்ந்தனர்.