ஹெரிடேஜ் பூங்காவை ரசித்த சுற்றுலா பயணியர்
ஊட்டி,; ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஹெரிடேஜ் பூங்காவை ரசித்து சென்றனர்.ஊட்டி ரோஜா பூங்காக்கு, 2006ம் ஆண்டு ஜப்பான் ஒசாகா நகரில் நடந்த சர்வதேச ரோஜா மாநாட்டில் 'கார்டன் ஆப் தி எக்ஸலன்ஸ்' விருது கிடைத்து. தற்போது, இந்த பூங்காவில், 4,000 ராகங்களில் 34 ஆயிரம் ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டு, அதில் பூக்கள் மலர்ந்துள்ளன. நடப்பாண்டின், 20 வது ரோஜா கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. அதில், கடல் வாழ் உயிரினங்களான டால்பின், பென்குயின், கடல் பசு, மீன் உள்ளிட்டவைகள், 2 லட்சம் ரோஜா மலரில் வடிவமைக்கப்பட்டன. ரோஜா கண்காட்சியின் இரண்டாம் நாளில், பூங்காவில் பிரசித்தி பெற்ற 'ஹெரிடேஜ்' பகுதியை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணியர் அதன் அருகே நின்று போட்டோ, செல்பி எடுத்து செல்கின்றனர். கடந்த இரண்டு நாட்களில், 30 ஆயிரம் சுற்றுலா பயணியர் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.