மேலும் செய்திகள்
4 நாட்களுக்கு பின் முதுமலை இன்று திறப்பு
27-Sep-2025
கூடலூர்: முதுமலை புல்வெளியில் ஓய்வெடுத்த புலியை சுற்றுலா பயணியர் வியப்புடன் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் புலி, யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, மான், மயில்கள் உள்ளிட்ட வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. வன விலங்குகள், தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளை பார்ப்பதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் தினமும் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை வனத்துறையினர், தங்கள் வாகனங்களில் வனப் பகுதிக்குள் சவாரி அழைத்து சென்று வருகின்றனர். வாகன சவாரியின் போது யானை, மான்கள், காட்டெருமை, மயில் உள்ளிட்ட வனவிலங்குகளை எளிதாக பார்க்க முடிந்தாலும், புலி, சிறுத்தை, கரடி போன்றவை மிக அபூர்வமாகவே தென்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணியர் மரத்தின் அடியில் புல்வெளியில் அமர்ந்து ஓய்வெடுத்த புலியை வியந்து பார்த்து ரசித்ததுடன், நீரோடையில் மற்றொரு புலி தண்ணீர் குடித்து செல்வதையும் பார்த்து ரசித்தனர்.
27-Sep-2025