உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குளமாக மாறிய சாலை: சுற்றுலா பயணியர் அதிருப்தி

குளமாக மாறிய சாலை: சுற்றுலா பயணியர் அதிருப்தி

கூடலூர்: - தமிழக ---- கேரளா எல்லை சாலையில் குளம் போல் தேங்கிய மழை நீரால் சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். கேரளா மாநிலம், மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணியர் கூடலூர் நாடுகாணி வழியாக, தமிழக -- கேரளா எல்லையை கடந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்கின்றனர். இச்சாலை, கேரளா,- கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழிதடமாக மூன்று மாநில அரசு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இவ்வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணி சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால், நாடுகாணி முதல் தமிழக - கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான 6கி.மீ., தூரமுள்ள சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள குழிகளில் தேங்கும் மழை நீரால், சாலை மேலும், சேதமடைந்து வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !