மேலும் செய்திகள்
சாலை மறியல்: 24 பேர் கைது
15-Jun-2025
ஊட்டி; மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நடந்த தொழிற்சங்கங்களில் மறியல் போராட்டத்தில், 300 பேர் கைது செய்யப்பட்டனர்.மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து, மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, ஊட்டி சேரிங்கிராஸ் தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு., -எஸ்.பி.எப்., -ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் மறியல் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். எஸ்.பி.எப்., மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், ஏ.ஐ.டி.யூ.சி., துணை பொது செயலாளர் நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட முயன்ற, 18 பெண்கள் உட்பட, 103 பேர் கைது செய்யப்பட்டனர்.பந்தலுாரில் நடந்த மறியல் போராட்டத்தில், 77 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் நடந்த மறியலில், 70 பெண்கள் உட்பட மொத்தம், 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
15-Jun-2025