போக்குவரத்து பாதிப்பு
குன்னுார்: குன்னுார் மவுண்ட்ரோடு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற பலமுறை புகார்கள் தெரிவித்தும், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், நகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இந்நிலையில், காலை, 8:00 மணியளவில் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கனரக சரக்கு லாரிகள், 3 கேட்கள் முன்பும் நின்று பொருட்களை இறக்குகின்றனர். இதனால், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் அரசு பஸ்கள், மினி பஸ்கள், பள்ளி வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.