உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சந்திரா காலனிக்குள் புகுந்த இரு சிறுத்தைகள்

 சந்திரா காலனிக்குள் புகுந்த இரு சிறுத்தைகள்

குன்னுார்: குன்னுார் பகுதிகளில் நாய்களை வேட்டையாட சிறுத்தைகள் உலா வருதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்குள்ள சந்திரா காலனிக்குள் புகுந்த இரு சிறுத்தைகள் அங்கு நீண்ட நேரம் அமர்ந்து சென்றது. இதனால், அதிகாலை நேரத்தில் பணிக்கு செல்வோர் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். இதே போல் வண்ணாரபேட்டை ஹவுசிங் யூனிட் பகுதிக்கு நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த குடிநீர் டேங்கில் தண்ணீர் குடித்துவிட்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்துள்ளது. பின்னர், குடியிருப்புக்கு நடுவே உள்ள சாலையில் சென்றன. மக்கள் கூறுகையில், 'தெரு நாய்களை வேட்டையாடுவதற்காக குடியிருப்புப் பகுதிக்குள் வரும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை