உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பராமரிப்பு இல்லாத நிழற்குடை பயணிகள் ஒதுங்குவதில் சிக்கல்

 பராமரிப்பு இல்லாத நிழற்குடை பயணிகள் ஒதுங்குவதில் சிக்கல்

கோத்தகிரி: கோத்தகிரி- ஊட்டி சாலையில் அமைந்துள்ள மடித்தொரை பஸ் நிறுத்தம் பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், பயணிகள் ஒதுங்குவதில் சிக்கல் அதிகரித்துள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, மடித்தொரை பிரிவு வழியாக, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர, சுற்றுலா வாகனங்களின் இயக்கமும் அதிகமாக உள்ளது. மக்கள் நலன் கருதி, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக, சாலையில் இருந்து, தாழ்வாக நிழற்குடை அமைந்துள்ளதால், மழை நீர் நிழற்குடைக்குள் தேங்குகிறது. பக்கவாட்டு சுவர் மற்றும் மேற்கூரை பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மழை நாட்களில் பயணிகள் ஒதுங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் சிரமமில்லாமல் ஒதுங்க ஏதுவாக, நிழற்குடைக்குள் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ