உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்; சேலாஸ் பகுதியில் சுகாதார சீர்கேடு

பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்; சேலாஸ் பகுதியில் சுகாதார சீர்கேடு

குன்னுார்; 'குன்னுார் சேலாஸ் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் உள்ள கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னுார் உலிக்கல் சேலாஸ் பகுதியில் பள்ளிகள், வங்கிகள் பிற அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அப்பகுதி சுற்றுப்புற பகுதி கிராமங்களை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளர்கள் அதிக அளவில் வந்து செல்லும் முக்கிய இடமாகவும் உள்ளது. அங்குள்ள பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொட்டியில் தண்ணீரும், கதவுகளும் இல்லை. மது அருந்துபவர்கள் இங்கு வந்த மது பாட்டில்களை அதிகளவில் வீசி செல்கின்றனர். ஏற்கனவே, இப்பகுதி பா.ஜ., நிர்வாகிகள் சார்பில் உலிக்கல் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளிககப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணவில்லையேல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி