உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகற்றப்படாத குப்பை; பாதிக்கப்படும் சுகாதாரம்

அகற்றப்படாத குப்பை; பாதிக்கப்படும் சுகாதாரம்

பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பைகளை அகற்றாததால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. பந்தலுார் பஜார் மற்றும் உப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கடைகள் உள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகராட்சி துப்புரவு பணியாளர்கள், குப்பைகளை முறையாக அகற்றாத நிலையில், உப்பட்டி மற்றும் பந்தலுார் பகுதியில் குப்பை தேங்கி சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில், 'குப்பையை முறையாக கொட்டி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,' என, நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வரும் நிலையில், அதனை செயல்படுத்த வேண்டிய நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலட்சியம் காட்டுவதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ