உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மவுன்ட் ரோட்டில் சீரமைக்காத கால்வாய்; நடவடிக்கை எடுக்காத நகராட்சி

மவுன்ட் ரோட்டில் சீரமைக்காத கால்வாய்; நடவடிக்கை எடுக்காத நகராட்சி

குன்னுார்; குன்னுார் மவுன்ட் ரோட்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைக்காமல் உள்ளதால் குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டு வருகிறது.குன்னுார் மவுன்ட் ரோடு வழியாக, அரசு மருத்துவமனை, பள்ளிகள், வழிபாட்டு ஸ்தலங்கள், வணிக நிறுவனங்களுக்கு வாகனங்கள் சென்று வரும், விநாயகர் கோவில் எதிரே உள்ள இடத்தில், அமைக்கப்பட்ட கால்வாய் மூடப்படாமல், திறந்த வெளியாக உள்ளது.செடிகள் முளைத்து, இதனை சுற்றி குப்பைகளும், கட்டட கழிவுகளும் கொட்டும் இடமாக மாற்றப்பட்டது. இதனை, இவ்வழியாக செல்லும் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.குன்னுார் ஜமாபந்தியில், மக்கள் மனு வழங்கியதால், காந்திபுரம், இந்திரா நகரில் உடனடியாக பணிகளை துவக்கிய அதிகாரிகள் இந்த கால்வாயை சீரமைக்கவும், நெடுஞ்சாலை துறையினர் குழியை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ