கூடலுார் குணில் கிராமத்தில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா
கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளி அருகே, குணில் கிராமத்தில் இளைஞர்கள் சார்பில், சுவாமி விவேகானந்தரின், 162 வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவுக்கு, முதுமலை ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் நாராயணன் தலைமை வகித்தார். அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் படத்துக்கு ஸ்ரீமதுரை முன்னாள் ஊராட்சி தலைவர் சுனில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி அருண் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில், விவேகானந்தரின் சமூக பணிகள் குறித்து விளக்கினர். விழாவில், இளைஞர்கள், சிறுவர்கள் பங்கேற்றனர்.