உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை

குன்னுாரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை

குன்னுார், ;குன்னுாரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட ஏராளமான முருக பக்தர்கள் மலை பாதை வழியாக நடந்து சென்றனர்.குன்னுாரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், தைப்பூச திருவிழாவையொட்டி, பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்று குன்னுாரில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். பல பக்தர்கள் வேல், காவடிகள் ஏந்தியும் தீர்த்த குடங்கள் சுமந்தும் மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக நடந்து சென்றனர். அதில், பலரும் பஜனை பாடல்கள் பாடி சென்றனர். முன்னதாக வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, கே.என்.ஆர்., பர்லியார் உட்பட பல்வேறு இடங்களிலும் முருக பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. வரும், 5ம் தேதி இவர்கள் பழனியை சென்றடைந்து, முருகனை தரிசனம் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ