உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகனங்கள் கழுவுவதால் மாசடையும் தண்ணீர்; மக்களுக்கு நோய் அபாயம்

வாகனங்கள் கழுவுவதால் மாசடையும் தண்ணீர்; மக்களுக்கு நோய் அபாயம்

கோத்தகிரி; கோத்தகிரி புதுார் தண்ணீர் பள்ளம் பகுதியில், வாகனங்கள் கழுவுவதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது.கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, கோடநாடு சாலையில், கேர்பெட்டா புதுார் பகுதியில், தண்ணீர் பள்ளம் அமைந்துள்ளது. இங்கு சாலையை ஒட்டி, வனவிலங்குகள் தண்ணீர் பருக ஏதுவாக, வனத்துறை சார்பில், 'செக் டேம்' கட்டப்பட்டுள்ளது.வனப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர், செக்டேமில் தேக்கி வைக்கப்படுகிறது. வறட்சி நாட்களிலும் வற்றாத இந்த தண்ணீர், வன விலங்குகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள, பழங்குடியின கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சாலை ஓரத்தில் வாகனங்கள் கழுவப்படுவது தொடர்கிறது. இதனால் சோப்பு உட்பட, ஆயில் கழிவுகள் தண்ணீரில் கலந்து மாசடைந்து வருகிறது. இந்த நீரை பயன்படுத்தும், வனவிலங்குகள் மற்றும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.வனத்துறை சார்பில், 'வாகனங்கள் கழுவக்கூடாது; மீறினால் தண்டிக்கப்படுவீர்' என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இப்பகுதியில் வாகனங்கள் கழுவுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, முக்கிய நீர் ஆதாரமான இந்த தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை