உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரியில் 55 பயனாளிகளுக்கு ரூ. 16.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

கோத்தகிரியில் 55 பயனாளிகளுக்கு ரூ. 16.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

கோத்தகிரி; கோத்தகிரியில், 55 பயனாளிகளுக்கு, 16.83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.கோத்தகிரியில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கலெக்டர் லட்சுமி பவ்யா, நெக்சிக்கம்பை ரேஷன் கடையில், அத்தியாவசிய பொருட்களின் தரம், எடை அளவு, மற்றும் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.மேலும், கோத்தகிரி அரசு மருத்துவமனையில், 15 நிதிக்குழு மானியத் திட்டத்தில், 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடப் பணி, சிகிச்சை விவரங்கள் மற்றும் மருந்துகளின் இருப்பை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கோத்தகிரி பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்க கடையில், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் விவசாய கருவிகள் இருப்பு மற்றும் பதிவேடுகள், வட்டார வேளாண்மை அலகு சார்பில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களின் இருப்புகள், ஜக்களாரை ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டார். இதனை அடுத்து, தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, 55 பயனாளிகளுக்கு, 16.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல உதவிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ