உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிணற்றில் பெண் சடலம்; போலீஸ் விசாரணை

கிணற்றில் பெண் சடலம்; போலீஸ் விசாரணை

பந்தலூர்; பந்தலுாரில் காணாமல் போன பெண்ணை கிணற்றில் சடலமாக மீட்டனர்.பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியைச் சேர்ந்தவர் பாபு, இவரின் வீட்டு கிணற்றில் துர்நாற்றம் வீசியதால் நேற்று மதியம் அங்கு சென்று பார்த்துள்ளார். கிணற்றினுள் ஒரு பெண்ணின் உடல், அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.தேவாலா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த சிவபாக்கியம் 65 என்பதும், இவர் தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை