மரம் சுமந்த தொழிலாளி திடீர் உயிரிழப்பு
குன்னுார்; குன்னுார் கேத்தி அருகே, வெட்டப்பட்ட மரத்தை சுமந்து வந்த தொழிலாளி திடீரென விழுந்து உயிரிழந்தார்.குன்னுார் கேத்தி அருகே கோதனட்டி கிராமத்தில் கற்பூர மரம் வெட்டப்பட்டு வந்தது. சோலாடா மட்டம் பகுதியை சேர்ந்த அப்பாஸ்,40, என்ற தொழிலாளி உட்பட பலர் வெட்டிய மரத்தை லாரியில் ஏற்றி வந்தனர். அதில், அப்பாஸ் திடீரென கீழே விழுந்து மயக்கமாகியுள்ளார். சேலாஸ் பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.