உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விடுதியில் உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

விடுதியில் உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

ஊட்டி; ஊட்டி இளைஞர் விடுதியில் உணவகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் லட்சுமிபவ்யா அறிக்கை: மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊட்டி இளைஞர் விடுதிக்கு ஒரு வருடம் உணவகம் செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இளைஞர் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கி, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 'இதற்கான ஒரு வருடத்திற்கான மாத வாடகை தொகை, காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு பட்டியல்,' என, அதற்கான விலை பட்டியலை பதிவு தபாலில் கலெக்டர் மற்றும் தலைவர் இளைஞர் விடுதி, ஸ்டோன் ஹவுஸ் என்ற முகவரிக்கு இம்மாதம், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை