உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குப்பை லாரி மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம்

குப்பை லாரி மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம்

பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சி குப்பை லாரி மோதியதில், பைக்கில் வந்த இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லியாளம் நகராட்சியில், ஒப்பந்த முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று குப்பை எடுத்து சென்ற மினி லாரி, ஏலமன்னா சாலையில் எதிரே வந்த, பைக்கில் மோதியது. அதில், பைக்குடன், இளைஞர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் உருண்டார். லாரியை ஒப்பந்தபணியாளர் ஜோதி என்பவர் ஓட்டி வந்துள்ளார். பைக்கில் வந்த கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரவீன்,24, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவாலா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி