உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / பள்ளி வேனில் சிக்கி 2 வயது சிறுவன் பலி

பள்ளி வேனில் சிக்கி 2 வயது சிறுவன் பலி

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், பசும்பலுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிங்காரவேல்- - சந்தியா தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இவர்களது முதல் குழந்தை விசித்ரா, 5, வி.களத்துார் ஐடியல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். சந்தியா நேற்று காலை 8:45 மணிக்கு விசித்ராவை பள்ளிக்கு சொந்தமான மேக்சி கேப் வேனில் வழி அனுப்ப, தன் இரண்டாவது குழந்தை சண்முகவேல், 2, உடன் அழைத்து சென்றார்.அப்போது, கவனக்குறைவாக சந்தியா, தன் மகன் சண்முகவேலை கீழே இறக்கிவிட்டார். இதை கவனிக்காமல் வேனை டிரைவர் சுதாகர், 28, என்பவர் ஓட்டினார். இதில், இடது பக்க முன் சக்கரத்தில் குழந்தை சண்முகவேல் சிக்கி படுகாயமடைந்தான். சிறுவனை மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சிறுவன் இறந்தார். இதுகுறித்து, வி.களத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை