வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொஞ்சம் ஏமாந்தா அந்த பத்தாயிரத்தை ஆட்டையப் போட்டிருப்பாங்க.
மேலும் செய்திகள்
தவறுகளால் பாடம் கற்குமா இண்டஸ்இண்ட் வங்கி?
19-May-2025
திருவளக்குறிச்சி; பெரம்பலுார் மாவட்டம், திருவளக்குறிச்சியை சேர்ந்தவர் ஆனந்தன், 34; டிரான்ஸ்போர்ட் தொழில் செய்கிறார். இவர், பெரம்பலுார் ரோவர் ஆர்ச் பகுதியில் செயல்பட்டு வரும், 'இண்டஸ்இண்ட்' வங்கி கிளையில், 94,950 ரூபாய் கடன் பெற்றார்.மாதம், 9,635 ரூபாய் வீதம் ஏழு மாதங்களாக தவணையை இ.சி.எஸ்., முறையில் ஆனந்தன் செலுத்தியுள்ளார். இதில், 1,030 ரூபாய், 'ஓவர் டியூ' செலுத்த வேண்டுமென வங்கி ஊழியர்கள், மொபைல் போனில் ஆனந்தனை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இந்த தொகையை கேட்டு, தினமும் போன் செய்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தன், நேரடியாக வங்கிக்கு சென்று, மேலாளர் உள்ளிட்ட ஏழு பேரை உள்ளே சிறை வைத்து, வங்கியை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓவர் டியூ ஆகி இருக்கலாம். இன்று மாலைக்குள் சரி செய்து உங்கள் கணக்கை சரி செய்கிறோம்' என, உறுதி அளித்ததை தொடர்ந்து, வங்கி கதவை திறந்து, அவர் ஊழியர்களை விடுவித்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கொஞ்சம் ஏமாந்தா அந்த பத்தாயிரத்தை ஆட்டையப் போட்டிருப்பாங்க.
19-May-2025