உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் /  பாட்டுப் பாடி ஓட்டு சேகரித்த மாஜி துணை சபாநாயகர்

 பாட்டுப் பாடி ஓட்டு சேகரித்த மாஜி துணை சபாநாயகர்

பெரம்பலுார்: குன்னம் தொகுதி ஐ.ஜே.கே., வேட்பாளர் சரண்யாவுக்கு ஓட்டு சேகரித்த முன்னாள் துணை சபாநாயகர், நரிக்குறவர் இன மக்களிடம் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தாணுங்க என பாடல் பாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். குன்னம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே., வேட்பாளராக சரண்யா போட்டியிடுகிறார். இவருக்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் குன்னம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மலையப்ப நகர் நரிக்குறவர் காலனி பகுதிக்கு ஓட்டு சேகரிக்க சென்ற ஐ.ஜே.கே., வேட்பாளர் சரணயாவுக்கு மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து நரிக்குறவர்கள் இன மக்கள் வரவேற்றனர். அப்போது, மேள சத்தத்துக்கு தகுந்தார் போல நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஆண்களும், பெண்கள் நடனடமாடி ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, துணை சபாநாயகர் அருணாசலம், நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தாணுங்க என எம்.ஜி.ஆர்., பாடால் பாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால், நரிக்குறவர்கள் உற்சாக மிகுதியில் ஆடிப்பாடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை