உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு; சிசு கொலையா?

இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு; சிசு கொலையா?

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே இரட்டை பெண் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், பெண் சிசுக்கொலையாக இருக்குமா என, போலீசார் விசாரிக்கின்றனர். பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி, 38, தனலட்சுமி, 33, தம்பதிக்கு, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. அதன் பின், ரேஷ்மா, தனுஸ்ரீ, ஆகிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பிறந்து, 11 மாதங்களான குழந்தைகளுக்கு, சில தினங்களாக காய்ச்சல், வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. ஜூலை, 11 காலை, வாலிகண்டபுரம் கிராமத்தில், நாட்டு வைத்தியம் செய்து வரும் சைதானி, 60, என்பவரிடம், மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தனர். மதியம், 1:30 மணியளவில், ரேஷ்மா என்ற குழந்தை உயிரிழந்தது. அதன் பின், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனுஸ்ரீ என்ற குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, 12ம் தேதி அதிகாலை இறந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், பெண் குழந்தைகள் இறந்த சம்பவம், சிசுக்கொலையாக இருக்குமா என்ற சந்தேகத்தில், தாய் தனலட்சுமி, பாட்டி சாந்தி, நாட்டு வைத்தியர் சைதானி ஆகியோரிடம், மங்களமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை