காட்டுப்பன்றி வேட்டை வாலிபர் கைது
பெரம்பலுார்:வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர் தலைமையில் வன ஊழியர்கள் காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மான் மற்றும் காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக, சேலம், ஆண்டிமடத்தை சேர்ந்த கோபிநாத், 35, என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.