உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் வரைபடத்தின் படி மேம்பாலம் கட்ட வேண்டும்

திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் வரைபடத்தின் படி மேம்பாலம் கட்ட வேண்டும்

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட உள்ள மேம்பாலம் பணிகளால், 50 வீடுகளுக்கு மேல் அகற்றப்பட உள்ளதாகவும், மேம்பாலம் ஏற்கனவே போடப்பட்ட வரைபடத்தில் உள்ளபடி கட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.புதுக்கோட்டையில், நீண்ட கால கோரிக்கையாக இருந்த திருவப்பூர் ரயில்வே கேட்டு பகுதியில் 41 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்து உத்தரவிட்டது. தற்போது நிலம் கையகப்படுத்த பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, போடப்பட்ட வரைபடத்தின் படி அரசு புறம்போக்கு நிலம் தான் கையகப்படுத்தப்பட்டு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் என்று வரைபடங்கள் அமைக்கப்பட்டன. தற்போது, புதிதாக அமைக்கப்பட்ட வரைபடத்தின் படி அந்த பகுதியில் உள்ள 50 குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் குடியிருக்கும் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஏற்கனவே, உள்ள வரைபடத்தின் படி, பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள், நேற்று மாவட்ட கலெக்டரை சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

G.Vijayan
ஏப் 16, 2025 21:45

திருவப்பூர் இரயில்வே கேட் பகுதியில் கீழ்மட்ட சுரங்கப் பாதை அமைய உள்ளது. பல வீடுகளையும் கடைகளையும் அகற்றிவிட்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. அதே பகுதியில் சிறிது தூரத்தில் 20 அடி அகலத்தில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. அதை சீர் செய்து பயன்படுத்தினால் அரசுக்கு செலவும் நேரமும் மிச்சம். ஒரு வீடும் பாதிக்கப்படாது. ஒரு கடையும் பாதிக்கப்படாது. இழப்பீடு தர வேண்டிய அவசியமும் வராது. மொத்தத்தில் தற்போதைய செலவு கணக்கில் 20% மட்டுமே போதுமானது. அரசு செவி சாய்க்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை