உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கஞ்சா கடத்திய நால்வருக்கு சிறை

கஞ்சா கடத்திய நால்வருக்கு சிறை

புதுக்கோட்டை:ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் கடந்த, 2023ம் ஆண்டு, 40 கிலோ கஞ்சா கடத்தியதாக, ராமேஸ்வரம் தலைமன்னார் நகர் ஜெயசீலன், 55, ராமநாதபுரம் தில்லைநாச்சியம்மன் குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன், 54, திருப்பூர், குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஒச்சம்மாள் 55, கருவம்பாளையம் கார்த்தி, 36, ஆகிய, 4 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து, நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், கஞ்சா கடத்திய ஜெயசீலன், ஒச்சம்மாள், ராஜேந்திரன், கார்த்திக் நால்வருக்கும், தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ