உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / பெண் ஏட்டு வீட்டில் கைவரிசை

பெண் ஏட்டு வீட்டில் கைவரிசை

புதுக்கோட்டை:விராலிமலை புதுப்பட்டியில், பெண் ஏட்டு வீட்டில் மர்ம நபர்கள் நகையை திருடிசென்றனர்.புதுக்கோட்ட்டை மாவட்டம், விராலிமலை புதுப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேனி, 40, இவர் இலுப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, நேற்றுமுன் தினம் காலையில், அவர் பணிக்கு சென்ற நிலையில், இவரது கணவர் கணேசன் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது.அப்போது, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கைப்பையில் வைத்திருந்த 30,000 ரூபாய் மற்றும் டேபிளில் இருந்த ஒன்றரை சவரன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை