ஆன்லைனில் கட்டணம் நோயாளிகள் அவதி
புதுக்கோட்டை,: அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்கான கட்டணத்தை இணைய வழியில் மட்டுமே வசூலிப்பதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவோர், அல்லது பிற மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருவோருக்கு, சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள், தமிழக மருத்துவ சேவை கழகம் வாயிலாக சலுகை விலையில் எடுத்துக் கொடுக்கப்படுகிறது.இந்த பரிசோதனைக்கான கட்டணம், இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளதால், நோயாளிகளும், அவர்களுடன் வருபவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.பொதுமக்கள் கூறியதாவது:அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், உடன் வருவோர் சிலரிடம் 'ஸ்மார்ட் போன்' இல்லை. ஆனால், ஸ்கேன், எக்ஸ்ரே கட்டணங்களை 'ஜிபே, போன்பே' போன்ற இணைய வழியில் மட்டுமே வசூலிப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்திஉள்ளது. பணமாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.