உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / விபத்தை ஏற்படுத்திய பின் காரில் மது குடித்த காவலர்

விபத்தை ஏற்படுத்திய பின் காரில் மது குடித்த காவலர்

புதுக்கோட்டை:காரில் மதுபோதையில் வந்த போலீஸ் ஒருவர், பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பின்னரும், அதே இடத்திலேயே தன் காரை நிறுத்தி, காரில் அமர்ந்து மதுவை அருந்தியதால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.புதுக்கோட்டை, ராம் தியேட்டர் பகுதியை சேர்ந்த சக்தி, 40, ஹீரோ பைக்கில் நேற்று டி.வி.எஸ்., கார்னர் பகுதியில் இருந்து சுப்பிரமணிய நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, 'பொலிரோ' காரில் வந்த நபர், சக்தி மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். சக்தி பலத்த காயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்தை ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் விசாரணை செய்ததில், புதுக்கோட்டையை சேர்ந்த ராம்பிரசாத், 41, என்பதும், போலீஸ்காரர் என்பதும் தெரிந்தது. விபத்தை ஏற்படுத்திய பின்னரும், காரை சாலை ஓரம் நிறுத்தி, காரில் அமர்ந்தபடி, மீண்டும் மது அருந்தி உள்ளார். ஆவேசமடைந்த பொதுமக்கள் அவரை மடக்கி, காரில் இருந்து இறக்கி தாக்க முயன்றனர்.கணேஷ்நகர் போலீசார், போதையில் இருந்த போலீஸ்காரரை உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை