உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் தினமும் 3 மணி நேரம் மின்தடை

ராமேஸ்வரத்தில் தினமும் 3 மணி நேரம் மின்தடை

ராமேஸ்வரம் : ஆன்மிக சுற்றுலாத் தலமான ராமேஸ்வரம் பகுதிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், மீன் பதப்படுத்துவதற்கான 10 ஐஸ் பேக்டரிகள் மற்றும் ஏராளமான வணிக கடைகள் உள்ளன.பக்தர்கள் கூட்டத்துடன் பரபரப்பாக இருக்கும் ராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் கடந்த இரு மாதமாக வாரத்திற்கு இருநாட்கள் மின் பராமரிப்பு என்ற பெயரில் மின்தடை ஏற்படுத்தினர். கடந்த சில நாள்களாக மின்தடை அறிவிக்காமலே தினமும் 3 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் தங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். உள்ளூர் மக்கள் மின்சாரம் இன்றி பொழுது போக்க முடியாமலும், இரவு துாக்கத்தை தொலைத்து விட்டனர்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ராமேஸ்வரம் பகுதியில் பல இடங்களில் புதிய மின்கம்பிகள் பொருத்தி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் பின் அடிக்கடி மின் தடை ஏற்படாது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்