| ADDED : ஜூலை 09, 2024 04:48 AM
திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏழு நாட்கள் வழிகாட்டுதல் பயிற்சி நடந்தது.கல்லுாரி துவங்கிய நாளிலேயே பாடத்திற்குள் சென்று அச்சம், மலைப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. அவர்களுக்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள சாதனையாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள், அரசியல்வாதிகள், கல்வி வழிகாட்டுநர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், அதிகாரிகள் பலரையும் அழைத்து உரையாடல்களை நடத்த வேண்டும்.இது போன்ற நிகழ்ச்சிகளால் தான் மாணவர்களுக்கு வளமான கல்வி சூழலை ஏற்படுத்த முடியும் என்பதால் உரிய திட்டமிடலுடன் 7 நாட்கள் பயிற்சி நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.அதன்படி திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 முதல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. கடைசி நாளான நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ராமமூர்த்தி, சரவணன், பாலசுப்பிரமணியன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.