உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அஞ்சலி செலுத்த வந்த 9 பேர் கார் விபத்தில் காயம்

அஞ்சலி செலுத்த வந்த 9 பேர் கார் விபத்தில் காயம்

பரமக்குடி: பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் வந்த கார் விபத்திற்குள்ளானதில் 9 பேர் பலத்த காயம்அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி கிராமத்திலிருந்து 9 பேர் நேற்று பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். காரை டிரைவர் சரத்குமார் 24, ஓட்டினார். பரமக்குடி அருகே காலை 6:30 மணிக்கு வந்த போது கமுதக்குடி நான்கு வழிச் சாலை சென்டர் மீடியனில் நிலை தடுமாறி மோதியது.இதில் காரில் வந்த படையப்பா 26, கால் முறிந்தது. மேலும் ரஞ்சித் குமார் 21, அணில் குமார் 21, பிரசாந்த் 26, பிரவீன் 19, ஸ்ரீராம் 23, சரத்குமார் 24, உதயன் 25, ஆகியோர் கால், தலையில் காயத்துடன் பரமக்குடி, மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரமக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை