மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
7 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
7 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
7 hour(s) ago
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை ராஜலட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:வேதாளையில் தேசிய நெடுஞ்சாலை அருகே எண்ணெய்க்கூண்டு பகுதி அரசு நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது குறிப்பிட்ட மதத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு சென்று வர சாலை வசதி இல்லை. உள்நோக்குடன் செயல்படுவது ஏற்புடையதல்ல.எட்டு கிராம மக்கள், சமத்துவபுரம், மரைக்காயர்பட்டினம், ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் பயன் பெற அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு, தமிழக சுகாதாரத்துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜூன் 2வது வாரம் ஒத்திவைத்தது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago