உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாதபுரம் பள்ளியில் ஓட்டு பதிவில் ஈடுபட்ட மாணவர்கள்

ரெகுநாதபுரம் பள்ளியில் ஓட்டு பதிவில் ஈடுபட்ட மாணவர்கள்

ரெகுநாதபுரம், : -ரெகுநாதபுரத்தில் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தலைவர் தேர்தல் நடந்தது. இதில் எதிர்காலத்தில் நாட்டின் தலைமை பண்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பள்ளி பருவத்திலேயே தெரிந்து கொள்ளவும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் நடத்தப்பட்டது. ஓட்டுச்சீட்டு முறையில் நடந்த தேர்தலில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை மாணவர்கள் தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். இதில் நாட்டில் நடக்கும் தேர்தலை போல கவுன்டிங் ஆபீஸர், ரிட்டர்னிங் ஆபீஸர், தேர்தல் ஏஜென்டுகள் எனப் பிரிக்கப்பட்டு தேர்தலில் ஓட்டளிக்கும் மாணவர்களுக்கு தனித்தனியான பேலட் பேப்பர்கள் வழங்கப்பட்டன.பிறகு இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து மாணவர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர். அனைவரும் வரிசையில் நின்று ஓட்டளித்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப், பள்ளி முதல்வர் ப்ரீத்தா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை