சாம்பல் புதன் வழிபாடு
ராமநாதபுரம்: கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்க நாளான சாம்பல் புதனை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் சாலைத்தெருவில் உள்ள ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் சிங்கராயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி நடந்தது.பாதிரியார்கள் சவரிமுத்து, கிரிதரன், இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.குருத்தோலையை தீயிட்டு அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை பூசி 40 நாள் விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.இதே போல் பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.