உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊருணியில் கர்ப்பிணி  சடலம் மீட்பு

ஊருணியில் கர்ப்பிணி  சடலம் மீட்பு

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் அருகே வைரவனேந்தலை சேர்ந்தவர் சரவணன், 29; கப்பல் ஊழியர். மனைவி பாக்கியலட்சுமி, 25, என்பவருடன், ராமநாதபுரம், ஸ்ரீராம் நகரில் வசித்தார். கணவருடன் தகராறு ஏற்பட்டதையடுத்து பாக்கியலட்சுமி நேற்று முன்தினம் திடீரென காணாமல் போனார். சரவணன், போலீசில் புகார் அளித்தார். பாக்கியலட்சுமியை, பஜார் போலீசார் தேடினர். இந்நிலையில், இடையர்வலசை ஊருணியில் மிதந்த பாக்கியலட்சுமியின் உடல் மீட்கப்பட்டது. அவர், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். பஜார் போலீசார், சந்தேக மரணம் என, வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ