உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதர் மண்டிய முதுகுளத்துார் மயானம்

புதர் மண்டிய முதுகுளத்துார் மயானம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி கிழக்கு தெருவில் உள்ள மயானம் வளாகத்தில் சீமைக்கருவேலம் வளர்ந்து புதர்மண்டியதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் பேரூராட்சியில் முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே மற்றும் முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு கிழக்கு தெருவில் பொது மயானம் உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு எரியூட்டும் மேடை, ரோடு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.பின் முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் தற்போது மயானம் வளாகத்தில் சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு சேதமடைந்தும், எரியூட்டும் மேடை விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இறந்தவர்களுக்கு சடங்கு செய்வதற்கு கூட மக்கள் சிரமப்படுகின்றனர். தண்ணீர் வசதி இல்லாமல் அருகில் இருக்கும் தொட்டியில் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது. சில நேரங்களில் விலைக்கு வாங்கி தண்ணீரை பயன்படுத்துகின்றனர். மழைக்காலத்தில் அடக்கம் செய்வதற்கு கூட மக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே மயானத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி