உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி.,  அரசு ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி.,  அரசு ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: -மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நிர்வாகி சேக்கிழார் தலைமை வகித்தார். செய்தி தொடர்பாளர் தங்கவேலு வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் சோமசுந்தரம், கூட்டுறவுத்துறை பொறுப்பாளர் சதீஷ்குமார், கோவிந்தராஜ், கீதா, மாவட்ட பொறுப்பாளர்கள் பாண்டியராஜன், சுரேஷ், ஜீவானந்தம், குடிநீர் வடிகால்வாரியம் மாதவன், நிதி செயலாளர் சுபாஷ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பதவி உயர்வு இட ஒதுக்கீடு முறையை நிறைவேற்றவும், பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ