மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
14 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
14 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
14 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
14 hour(s) ago
ராமநாதபுரம் : ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடிகர் சீனிவாசன் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணை ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டது.தேவிபட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 60. இறால் பண்ணை, உப்பளம் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் அபிவிருத்திக்காக ரூ.15 கோடி கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்துள்ளார்.இதனை அறிந்த நடிகர் சீனிவாசன், தான் கடன் வாங்கி தருவதாக கூறி அதற்காக ரூ.15 லட்சம் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று முனியசாமியிடம் ரூ.15 லட்சம் வாங்கி உள்ளார். இந்த தொகையை பெற்றுக்கொண்ட சீனிவாசன் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றினார். பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.14 லட்சத்திற்கு காசோலை வழங்கினார். அந்த காசோலையை முனியசாமி வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இது தொடர்பாக முனியசாமி ராமநாதபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சீனிவாசன் ஆஜராகவில்லை. மாஜிஸ்தரேட் நிலவேஸ்வரன் வழக்கு விசாரணையை ஜூன் 12க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago