மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
14-Jun-2026
தேவிபட்டினம்: ராமநாதபுரம் அண்ணா பல்கலை., பொறியியல் கல்லுாரி வளாகத்தில் ஓ.என்.ஜி.சி., மற்றும் ஜாப்ஸ் நிறுவனம் சார்பில் துாய்மை பாரத் இயக்க துாய்மை பிரசார நிகழ்வு 15 நாள் நடந்தது. இதையொட்டி ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில், சுற்றுப்புறத் துாய்மை குறித்தும், மரக்கன்று நடுதலின் அவசியம் குறித்து கல்லுாரி மாணவர்கள் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வாப்ஸ் நிறுவனச் செயலாளர் அருள் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷு நிகம், ஓ.என்.ஜி.சி., தலைமை பொறியாளர் ஜென்மஜெயம், அண்ணா பல்கலை.,பொறியியல் கல்லுாரி டீன் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாப்ஸ் நிறுவன திட்ட பயிற்சி அலுவலர் சுப்புராஜ் நன்றி கூறினார்.
14-Jun-2026