உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலமடை பள்ளி அருகே ஆபத்தான மெகா பள்ளம்

மேலமடை பள்ளி அருகே ஆபத்தான மெகா பள்ளம்

உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை அருகே மேலமடையில் ஆங்கில வழியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளி அருகே மழை நீர் மற்றும் கழிவுநீர் செல்வதற்கான வாறுகால் சிமென்ட் ஸ்லாப் வாகனம் மோதியதில் சேதமடைந்தது.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நுழைவு வாயில் அருகே மெகா பள்ளத்தால் பள்ளி செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: பள்ளி அருகே உள்ள மெகா பள்ளத்தால் பள்ளி மாணவர்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் முதியவர்கள் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே மாணவர்களின் நலன் கருதி திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் பார்வையிட்டு மெகா பள்ளத்தை சிமென்ட் ஸ்லாப் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை