உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அக்., மழையில் நெற்பயிர் பாதிப்பு நிவாரண அறிவிப்பின்றி அதிருப்தி

அக்., மழையில் நெற்பயிர் பாதிப்பு நிவாரண அறிவிப்பின்றி அதிருப்தி

ராமநாதபுரம்:பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் ராமநாதபுரத்தில் அக்.,ல் பெய்த மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் அறிவிக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன் வயலை உழவு செய்து நெல் விதைக்கின்றனர். 2024-2025ல் ஆண்டுசாரசரி பருவ மழையான 827 மி.மீ., காட்டிலும் டிச., வரை 940 மி.மீ., மழை பெய்துள்ளது.புரட்டாசி, ஐப்பசியில் பெய்ய வேண்டிய மழை பருவம் தவறி கார்த்திகையில் பெய்ததால் வளர்ந்து பால் பிடிக்கும் நேரத்தில் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. மேலும் தை மாதம் (ஜன.,ல்) அறுவடையின் போது பெய்த மழையால் மிளகாய், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மீண்டும் முளைத்தன. வேளாண் அதிகாரிகள் பயிர் சேதம் குறித்து வருவாய்த்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்தினர்.தற்போது பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு வெள்ள நிவாரணம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் அறிவிக்கல்லை. அக்., மழையில் சேதமடைந்த பயிருக்கு அரசு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'இம்மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு இல்லை. பருவமழை சேதம் தொடர்பாக இரு கட்டங்களாக கணக்கெடுப்பு நடந்துள்ளது. மழையால் அக்., முதல் டிச.,வரை, ஜன.,ல் நெற்பயிர், மிளகாய், பருத்தி என 23 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.14 கோடி நிவாரணம் கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை