உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகம் மற்றும் கூட்ட அரங்குகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது.கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பல்வேறு துறைகள் சார்பில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.திருப்புல்லாணியில் உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்தார். பின் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டார். அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தவர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, கோட்டாட்சியர் ராஜ மனோகரன், மாவட்ட சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் தனலட்சுமி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பத்மநாபன், கீழக்கரை தாசில்தார் ஜமால் முகமது, திருப்புல்லாணி பி.டி.ஓ.,க்கள் ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன்,அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் முறையான பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கான திட்டப்பணிகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.