உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செபஸ்தியார் சர்ச் கொடியேற்றம்

செபஸ்தியார் சர்ச் கொடியேற்றம்

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி செபஸ்தியார் சர்ச் பிரசித்தி பெற்றது. இந்த சர்ச் விழா மார்ச் 1ல் நடப்பதை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக தினமும் மாலையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன.தொடர்ந்து மார்ச் 1ல் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு முக்கிய விழாவான தேர்பவனி விழா அன்று மாலை நடக்கிறது. விழாவின் தொடர்ச்சியாக மறுநாள் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கொக்கூரணி பாதிரியார் ராஜமாணிக்கம் தலைமையில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ