உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமலா நேரு நகர் விளையாட்டு மைதானத்தில் குப்பை தேக்கம்

கமலா நேரு நகர் விளையாட்டு மைதானத்தில் குப்பை தேக்கம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் கமலா நேரு நகர் விளையாட்டு மைதானத்தில் குப்பை, கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.எமனேஸ்வரம் கமலா நேரு நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான வீடுகள் இருக்கிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஒட்டுமொத்தமாக விளையாட்டு மைதானத்தை நோக்கி செல்கிறது. அப்பகுதியில் வாறுகால் முறையாக கட்டப்படாமல் அந்த வழியாக செல்லும் குழந்தைகள் உட்பட அனைவரும் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.மைதானம் முழுவதும் குப்பை கொட்டப்பட்டு சுகாதார கேடாக மாறியுள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகள் உட்பட ஒட்டுமொத்த வீடுகளிலும் நாள் முழுவதும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கைத்தறி நெசவாளர்களின் வீடுகளில் தறி மேடையில் பூச்சிகள் தாக்கத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.குப்பை, கழிவு நீர் தேங்குவதை தடுப்பதுடன், மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை