உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சகதிக்குள் சிக்கிய அரசு பஸ் மீட்பு 

சகதிக்குள் சிக்கிய அரசு பஸ் மீட்பு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூரி சாத்த அய்யனார் கோயில் அருகே குப்பை வாகனத்திற்கு வழி விட ரோட்டை விட்டு இறங்கிய அரசு பஸ் சகதிக்குள் சிக்கியதால் மீட்பு வாகனம் மூலம் மீட்கப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினத்திற்கு 4 'இ' வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து கூரி சாத்த அய்யனார் கோயில் பகுதியில் வந்தது. டிப்போவில் இருந்து வந்ததால் பயணிகள் இல்லை.அப்போது பின்னால் வந்த குப்பை வாகனத்திற்கு வழி விடுவதற்காக ரோட்டை விட்டு கீழே இறங்கிய போது சகதிக்குள் முன் பக்க சக்கரம் சிக்கிக் கொண்டது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மீட்பு வாகனம் மூலம் அரசு டவுன் பஸ்சை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !