உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாரச்சந்தை அருகே சென்டர் மீடியன் அமைக்க வலியுறுத்தல்

வாரச்சந்தை அருகே சென்டர் மீடியன் அமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தை அருகே ரோட்டில் சென்டர் மீடியன் அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தை வழியாக இளையான்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோடு வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் வாரச்சந்தை வளைவு பகுதியில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே அப்பகுதியில் விபத்துக்களை தடுக்கும் விதமாக ரோட்டில் சென்டர் மீடியன் அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை